Post

Share this post

உலகக் கிண்ண மைதானத்தில் குவிக்கப்பட்ட பொலிஸார்!

உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அவுஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்ல்ஸூம் நேரில் பார்வையிடவுள்ளனர்.
இந்நிலையில், போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளுக்காக 4500 பொலிஸார் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர்.
உலகக்கிண்ண இறுதிப்போட்டியை முன்னிட்டு நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியும் நடத்தப்படவுள்ளது.
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

Leave a comment