Post

Share this post

இரு கருப்பைகள் இரு குழந்தைகள் – அதிசய பெண்!

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர். 32 வயதான இவர் 2 கருப்பைகள் கொண்ட அதிசய பெண்ணாக உள்ளார்.
பிறப்பிலேயே அரிய கருப்பை கொண்ட இவருக்கு திருமணமாகி , 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கெல்சி ஹேட்சர் மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.
அதிசயமாக அவரது 2 கருப்பையிலும் தனித்தனி குழந்தைகளை அவர் சுமந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரு கருப்பைகளிலும் இரு குழந்தைகளை சுமப்பது மருத்துவ வரலாற்றில் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இதை கடவுளின் ஆசீர்வாதமாக கெல்சி மற்றும் அவரது கணவர் கருதுகின்றனர். ஒவ்வொரு கருப்பையும் வெவ்வேறு நேரங்களில் சுருங்க கூடும் என்பதால் குழந்தைகள் மணி நேரம், நாட்கள் அல்லது வாரங்கள் இடைவெளியில் பிறக்கலாம் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

Leave a comment