பங்களாதேஷ் கிரிக்கெட் அணித் தலைவர் ஷாகிப் அல் ஹசன், அரசியலுக்குள் நுழைந்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட அந்நாட்டின் ஆளும் கட்சியில் இணைந்துள்ளார்.
அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் அந்நாட்டின் ஆளும் கட்சியான அவாமி லீக்கின் வேட்புமனுவைக் கோரி, முறைப்படி அரசியலில் நுழைந்துள்ளார்.
இது தொடர்பில் அவாமி லீக் இணைச் செயலாளர் பஹவுதீன் நசிம், ஷாகிப் அல் ஹசன் தமது கட்சியில் இணைந்ததை உறுதிப்படுத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.