Post

Share this post

காசுக்காக குழந்தையை தாய் எடுத்த அதிர்ச்சி வீடியோ!

பணத்திற்காக தாய் ஒருவர் குழந்தையை வைத்து செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டில் உள்ள, ரஷிய ஆக்கிரமிப்பு பகுதி டொன்ஸ்டஸ்க் என்ற பகுதியை சேர்ந்தவர் அலினா. இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. கணவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் தனி தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களது குழந்தை தாயிடம் உள்ளது. இந்த பெண் தனது குழந்தையை பயங்கரமாக தாக்கி அதனை வீடியோ எடுத்து தனது கணவருக்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், அந்த பெண் விடியோவை அனுப்பிவிட்டு, உனது குழந்தையை பராமரிக்க கூடுதல் தொகை செலவாகும் எனவும், தனக்கு ஜீவனாம்சமாக மாதம் தரும் தொகையை உயர்த்தி தரவேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த விடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் உடனடியாக அதனை வைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment