Post

Share this post

உலகக் கிண்ண தோல்வியால் பிரபல இயக்குநருக்கு நடந்த சோகம்!

இந்திய அணி உலகக் கிண்ணத்தில் தோல்வியுற்றதால் அழுதுகொண்டே இருந்ததாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் நேற்று நடந்த ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்திய அணியின் தோல்வி கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியது. பலர் மனமுடைந்த கண்ணீர் சிந்திய தருணங்களையும் பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் இயக்குநர் செல்வராகவன் இந்திய அணி தோற்றதால் அழுதுகொண்டே இருந்ததாக பதிவிட்டுள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், ‘நேற்று கிரிக்கெட்டில் தோற்ற பிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது’ என தெரிவித்துள்ளார்.

Leave a comment