இஸ்ரேல் பெண்கள் செய்த மாஸ் யோகா! (வீடியோ)

ஒற்றுமையை வெளிக்காட்ட இஸ்ரேல் பெண்கள் மிகப்பெரிய யோகா நிகழ்ச்சியை நடத்தினர்.
பாலஸ்தீனத்துடனான போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவர்களுடன் ஒற்றுமையாக இருப்பதை வெளிகாட்டும் பொருட்டு, இஸ்ரேலிய பெண்கள் மிகப்பெரிய யோகா நிகழ்ச்சியை நடத்தினர்.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் தரப்பில் 1300 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலின் பதில் தாக்குதலால் பாலஸ்தீனத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தி வருகிறது.
முன்னதாக, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது முதல் தாக்குதல் நடத்திய போது இஸ்ரேலிய மக்கள் பலரை பிணைய கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இந்த நிலையில், பிணையக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை தெரிவிக்கவும், பலியான அப்பாவிகளின் குடும்பங்களுக்கு அஞ்சலி செலுத்தவும், இஸ்ரேலிய பெண்கள் டெல் அவிவ் கடற்கரையோரத்தில் மிகப்பெரிய யோகா நிகழ்ச்சியை நடத்தினர். ஒற்றுமையின் சக்திவாய்ந்த காட்சியாக அமைந்த இந்த நிகழ்ச்சியில், ஏராளமான சிறுமிகள், பெண்கள் கலந்து கொண்டனர். பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை தங்களுடன் வைத்துக் கொண்டு அவர்கள் யோகா செய்தனர்.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 240 பேர் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வாஷிங்டன் போஸ்ட்டின் தகவலின்படி, பிணையக் கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக ஐந்து நாள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
Mass yoga event was organised by Israeli women on the coast of Tel Aviv in solidarity with the captured in Gaza and the families of innocent victims killed. pic.twitter.com/mQiyqwGrx7
— Megh Updates 🚨™ (@MeghUpdates) November 19, 2023