நடிகை ராதாவின் முதல் மகள் கார்த்திகா நாயர். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜுவாவுடன் ‘கோ’ படத்தில் தமிழில் நடிகையாக அறிமுகமானார். மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் இந்தப் படத்துக்குப் பிறகு 2013இல் அன்னக்கொடி படத்தில் நடித்தார்.
சில மலையாளப் படங்களிலும் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ள கார்த்திகா நாயரின் கடைசிப் படமாக தமிழில் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தில் நடிந்திருந்தார்.
ரோஹித் மேனன் என்பவருடன் கேரளாவில் நவ.19 பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்வுக்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ஜாகி செராஃப், நடிகைகள் ராதிகா சரதகுமார், சுஹாசினி, ரேவதி, மேனகா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.