சமீப காலமாக சமூக வலைதளங்களில் வரும் சினிமா விமர்சனங்கள் குறித்த கருத்துகள் மக்கள் மத்தியில் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறதாக விமர்சகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கூறி வருகிறார்கள்.
கேரளாவில், எர்ணாகுளம் காவல்துறையினர் படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வருவதாக இயக்குநர் (உபைனி இப்ராஹிம்) அளித்த புகாரின் பேரில் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யூடியூப் நேர்காணல் ஒன்றில் இயக்குநர்கள் மணிரத்னம், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், சுதா கொங்கரா, மடோனா அஸ்வின், பிஎஸ்.வினோத் ராஜ் ஆகியோரகள் கலந்து கொண்டு சினிமா குறித்து பேசினார்கள்.
இயக்குநர் மணிரத்னம் இது குறித்து பேசியதாவது:
கிண்டலின் மூலமாக சமூக வலைதளத்தில் சிலர் விஷத்தை கக்குவதற்காகவே வருகிறார்கள். சிலர் மட்டுமே நேர்மறையான விமர்சனங்களோடு வருகிறார்கள். சமூக வலைதளத்தில் இன்னும் விஜய் அஜித் ரசிகர்கள் சண்டையிடுவது வாடிக்கையாக இருக்கிறது. சமூக வலைதள விவாதம் என்பது தெருச்சண்டை போன்றது எனக் கூறினார்.
தற்போது மணிரத்னம் கமலுடன் சேர்ந்து தக் லைஃப் படத்தினை இயக்கி வருகிறார். அதன் டைட்டில் லுக் விடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.