சித்தார்த் ரகசிய திருமணம்!

நடிகர் சித்தார்த் பிரபல நடிகை அதிதி ராவ் உடன் காதலித்து வந்ததை நாம் அறிவோம்.
இந்த நிலையில், இன்று காலை நடிகர் சித்தார்த் – அதிதி ராவ் திருமணம் ரகசியமாக நடந்துள்ளது என தெலுங்கு திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீரங்கபுரம் கோவிலில் இவர்களுடைய திருமணம் நடந்துள்ளதாம். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்த திருமணமத்தில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இது நடிகர் சித்தார்த்துக்கு இரண்டாம் திருமணம் ஆகும். ஏற்கனவே மேக்னா என்பவரை 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து 2007 ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.