தகாத உறவு – திருமணமான பெண் – நேர்ந்த சோகம்!
காதலனை சந்திக்க சென்ற திருமணமான பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாதவரம் அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பிரவின்பிரபு (28) – தேவி (24). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இதனிடையே தேவிக்கு அதே பகுதியில் தங்கி வேலை செய்து வந்த திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த வாலிபர் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனால் அவரை சந்திக்க தேவி, திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபரின் குடும்பத்தினர் தேவிக்கு அறிவுரைகள் கூறி, அவரை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து தேவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்த போலீசார், அவரை அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தினார். பின்னர் தேவியை காப்பகம் ஒன்றில் தங்க வைத்தனர்.
அப்போது மன அழுத்தத்தில் இருந்த அவர் காப்பகத்தின் முதல் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவருக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தேவிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.