Post

Share this post

ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியாமல் திணறும் பிரபல வீரர்கள்!

ஐபிஎல் போட்டி தொடங்கி ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்டது. இதுவரை 681 சிக்ஸர்களும் 1301 பவுண்டரிகளும் அடிக்கப்பட்டுள்ளன. அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ராஜஸ்தான் அணியின் பட்லர், 36 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ராயுடு இதுவரை அதிகபட்சமாக 14 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதிக பவுண்டரிகளையும் பட்லரே அடித்துள்ளார். 50 பவுண்டரிகள். அடுத்த இடத்தில் உள்ள கே.எல். ராகுல், 38 பவுண்டரிகளை அடித்துள்ளார். சிஎஸ்கேவில் அதிகபட்சமாக ராயுடு, 22 பவுண்டரிகளை அடித்துள்ளார்.
சரி, அதிகப் பந்துகளை எதிர்கொண்டும் ஒரு சிக்ஸரும் அடிக்கத் திணறும் வீரர்கள் யார் யார்?
இந்தப் பட்டியலில் ஜானி பேர்ஸ்டோவுக்கே முதலிடம். பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடும் பேர்ஸ்டோ, 6 ஆட்டங்களில் 79 ஓட்டங்களே அடித்துள்ளார். ஒரு சிக்ஸரும் இல்லாமல் 13 பவுண்டரிகளை அடித்துள்ளார்.
ஐபிஎல் 2022 : அதிகப் பந்துகள் – 0 சிக்ஸர்

70 பந்துகள் – ஜானி பேர்ஸ்டோ
63 பந்துகள்- மேத்யூ வேட்
44 பந்துகள்- சர்பராஸ் கான், டேரில் மிட்செல்
35 பந்துகள்- விஜய் சங்கர்
30 பந்துகள்- டேவிட் வில்லி

Recent Posts

Leave a comment