இலங்கைக்கு 300 மில்லியன் யுவான் நிதியுதவி வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சீனப் பிரதமர் லீ கெகியாங்கிற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பெறுபேறாக இந்த நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த நிதியின் மூலம் இலங்கைக்கு அத்தியாவசியமான மருந்துகள், உணவுப் பொருட்கள், எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுக் கொள்ளப்படும் என பிரதமர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.