OOSAI RADIO

Post

Share this post

இலங்கையில் மாரடைப்பால் உயிரிழப்போர் அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமட்டுமன்றி, மாரடைப்பு ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் உள்ளது.

மேலும் , உடல் உறுப்புகளின் செயற்பாடுகள் பற்றிய கவனமின்மை, புகையிலை , போதைப்பொருள் பாவனை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் மாரடைப்பு ஏற்படுவதாகவும் சுகாதாரத் துறை திணைக்களம் சுட்டிகாட்டியுள்ளது.

Leave a comment

Type and hit enter