OOSAI RADIO

Post

Share this post

ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பான முக்கிய அறிவிப்பு

ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாட்டை தீர்க்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆசிரியர்களுக்கு சம்பள முரண்பாடு கிடையாது என்றும் அவர்களுக்கான சம்பள முரண்பாடு தீர்க்கப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் வெளியிட்ட தகவல் நாட்டிலுள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் அதிபர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இதுதொடர்பில் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

இதற்கு கல்வி அமைச்சர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்,

அதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவியில் உள்ளவருக்கு கொள்கை ரீதியான விடயம் தொடர்பில் இவ்வாறான அறிக்கையை வெளியிடுவதற்கான எத்தகைய அதிகாரமும் கிடையாது.

நான் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்திலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அது தொடர்பில் விளக்கம் ஒன்றைப் பெற்றுத் தருமாறு நான் அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ஆசிரியர் கல்வி சேவை, அதிபர்கள் சேவை, கல்வி நிர்வாக சேவை, ஆசிரியர் ஆலோசனை சேவை உள்ளிட்ட சேவைகளிலும் சம்பள முரண்பாடு காணப்படுகிறது.

அது தொடர்பில் சம்பந்தப்பட்ட குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டு பொது நிர்வாக அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அந்த அமைச்சின் இணக்கப்பாட்டுடன் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் இதற்கு முன்னரும் இந்த அதிபர்களுக்கான சம்பள முரண்பாடு தொடர்பில் பல தடவைகள் சபையில் விளக்கமளித்துள்ளேன்.

இந்த விவகாரம் தொடர்பில் 2021ஆம் ஆண்டில் ஆசிரியர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். அதன் போது அப்போதைய கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் தலைமையில் அது தொடர்பில் ஆராய்ந்து அப்போதைக்கு தற்காலிக தீர்வு ஒன்று வழங்கப்பட்டது.

எனினும் அதன் மூலம் சம்பள முரண்பாடு தீர்க்கப்படவில்லை. அந்த வகையில் இந்த சம்பள முரண்பாட்டை தீர்க்கும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டார்.

Leave a comment

Type and hit enter