தமன்னாவுக்கு சைபர் கிரைம் பொலிஸார் சம்மன்!
இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா. ஜீ கார்ட்டா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற வெப் தொடர்களில் நடித்து பாலிவுட் சினிமாவிலும் பாப்புலர் ஆகிவிட்டார்.
கடந்த 2023 -ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பு செய்ய வியாகாம் என்ற நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது, ஆனால் ஐ.பி.எல். போட்டிகளை பேர்பிளே (Fairplay) என்ற செயலியில் மூலமாக சட்டவிரோதமாக ஒளிபரப்பாகி இருக்கிறது.
இதனால் viacom நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் Fairplay செயலியின் விளம்பரத்தில் நடித்த தமன்னாவிற்கு மும்பை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருக்கின்றனர். அதன்படி வருகிற 29-ம் தேதி தமன்னா நேரில் ஆஜராகும்படி சம்மன் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.