OOSAI RADIO

Post

Share this post

நான் விரும்பவில்லை – பிரேக்கப் செய்த ஸ்ருதிஹாசன் காதலர்!

நடிகை ஸ்ருதிஹாசனுடன் பிரேக்கப் குறித்து அவருடைய முன்னாள் காதலர் பேசியுள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன் சாந்தனு என்ற ஆர்ட்டிஸ்டை வெகு நாட்களாக காதலித்து வந்தார். இருவரும் மும்பையில் ஒரே வீட்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது ஜோடியாக இருவரும் எடுக்கும் புகைப்படங்களை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து வந்தார் ஸ்ருதிஹாசன்.

இந்த நிலையில், அவரது வலைதளப் பக்கத்தில் திடீரென சாந்தனுவை ஸ்ருதி அன்ஃபாலோ செய்துள்ளார் . மேலும், சாந்தனுவுடன் இருக்கும் தனது பிறந்தநாள் கொண்டாட்டம், தமிழ் புத்தாண்டு என பகிர்ந்த அனைத்துப் புகைப்படங்களையும் தனது பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

இதனை நோட் செய்த ரசிகர்கள் இருவருக்கும் பிரேக்கப்பா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.அதே சமயத்தில், சாந்தனுவும் ஸ்ருதியை சமூகவலைதளப் பக்கங்களில் இருந்து அன்ஃபாலோ செய்துள்ளார். ‘சிலரின் உண்மை முகங்கள் இப்போதுதான் தெரிய வந்துள்ளது’ எனப் புதிரான ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார் ஸ்ருதி.

இது குறித்து ஸ்ருதி வெளிப்படையாக பேசாவிட்டாலும், இது ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் என்றும் தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் நிறைய விஷயங்களை இந்தக் காலக்கட்டத்தில் தெரிந்து கொண்டதாகவும் சொல்லி தனது பிரேக்கப்பை மறைமுகமாக உறுதிபடுத்தியுள்ளார்.

இதை தொடர்ந்து, பாலிவுட் ஊடகம் ஒன்று சாந்தனுவிடம் பிரேக்கப் பற்றி கேட்டனர். அதற்கு அவர், ‘மன்னித்து விடுங்கள்! இதுபற்றி பேச விரும்பவில்லை. அது தனிப்பட்ட விஷயம்’ என்று அந்த கேள்வியைத் தவிர்த்திருக்கிறார்.

Leave a comment

Type and hit enter