Share this post

சாரதிகள் பற்றாக்குறை – சில ரயில் பயணங்கள் ரத்து!

ரயில் இயந்திர சாரதிகள் பற்றாக்குறை காரணமாக கொழும்பில் இருந்து புறப்படவிருந்த சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து றம்புக்கனை வரை இயக்கப்படவிருந்த ரயிலும், கோட்டையில் இருந்து பொல்கஹவெல வரையில் பயணிக்கவிருந்த ரயிலும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்று இரவு மருதானையில் இருந்து அளுத்கம வரை பயணத்தை ஆரம்பிக்கவிருந்த ரயிலும் இயந்திர சாரதிகள் பற்றாக்குறை காரணமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Recent Posts

Leave a comment