ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சங்கக்கா! (Video)
விளையாட்டு வீரர் ஒருவரின் தந்தைக்கு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார மரியாதையளித்த விதம் சமூக வளைத்தளங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சங்கக்காரா தற்போது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் கடமையாற்றி வருகிறார்.
சமீபத்தில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி வெற்றியின் பின்பு ராஜஸ்தான் அணியின் துரவ் ஜூவெல்லின் பெற்றோர்கள் தங்கள் மகனைச் சந்திக்க மைதானத்திற்கு வந்தனர்.
அப்போது சங்கக்காரவைப் பார்த்த ஜூவலின் தந்தை சந்தோஷத்தில் சலுட் செய்து தனது அன்பை வெளிப்படுத்துவார்.
இதனை பார்த்த சங்கக்காரா தனது தொப்பியை கழற்றி அவருக்கு மதிப்பு வழங்கும் வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
விளையாட்டை தவிர்த்து சங்கக்காரா ஒரு சிறந்த மனிதர் என பலரும் பதிவு செய்து வருகிறார்கள்.
இதேவேளை இந்த ஆண்டு ஐ.பி.எல்.போட்டியின் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் ராயல் அணி தற்போது வரையில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.