OOSAI RADIO

Post

Share this post

கொவிட் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

கொவிஷுல்ட்தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி நிறுவனம் முதன்முறையாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த தடுப்பூசியானது பல்வேறு வழக்குகளில் உயிரிழப்புக்கள் மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது சிலருக்கு குருதி உறைவு நோயை ஏற்படுத்தியுள்ளதோடு குருதிக் கலங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி பல்வேறு குறைபாடுகளை கொண்டுள்ளதோடு அதன் செயற்றிறன் மிகவும் அதிகமாக்கி காட்டப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி நிறுவனத்துக்கு எதிராக 51 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் 100 மில்லியன் யூரோ பெறுமதியான நஷ்டஈடு கோரப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இந்நிலையில், தங்களின் தடுப்பூசியால் பாதிப்படைந்தவர்களுக்கு அனுதாபத்தை தெரிவிப்பதாக அஸ்ட்ரா செனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், நோயாளிகளின் பாதுகாப்பே எங்களின் முன்னுரிமை எனவும் அனைத்து மருந்துகளின் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதிசெய்ய எங்கள் அதிகாரிகள் முயற்சிக்கின்றனர் எனவும் அவர்கள் அடிக்கோடிட்டு காட்டியுள்ளனர்.

குறித்த நிறுவனம் கொவிஷுல்ட் தடுப்பூசியை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter