OOSAI RADIO

Post

Share this post

O/L அனுமதி அட்டைகளில் பாரிய குளறுபடிகள்!

கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சைக்கான நுழைவுப் பத்திரங்களில் பாரிய குளறுபடிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அவர்கள் விண்ணப்பம் செய்யாத பாடங்களை குறிப்பிட்டு நுழைவுபத்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அநேகமான நுழைவுப் பத்திரங்களில் பரீட்சார்த்தியின் மொழிமூலம் மாற்றம் செய்யப்பட்டு அச்சிடப்பட்டுள்ளதாக அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

பரீட்சை நுழைவுப்பத்திரங்கள் கணனி மயப்படுத்தப்படும் போது ஏற்பட்ட தவறு காரணாமாக இவ்வாறு பரீட்சை நுழைவுப் பத்திரங்களில் பல்வேறு குளறுபடிகள் பதிவாகியுள்ளன.

இரண்டாம் தடவையாக தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளது நுழைவுப் பத்திரங்களில் பல குறைபாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கணித பாட பரீட்சைக்கு மட்டும் தோற்றும் பரீட்சார்த்திகளின் நுழைவுப் பத்திரத்தில் விஞ்ஞான பாடமும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பரீட்சைக்கான ஆளணி வளம் மற்றும் பரீட்சை வினாத்தாள் என்பன நுழைவுப் பத்திரங்களின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படுவதனால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இம்முறை 452,979 பேர் பரீட்சைக்குத் தோற்ற உள்ளதாகவும் இதில் 65,331 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எனவும்

3,527 பரீட்சை நிலையங்களில் எதிர்வரும் 6 ஆம் திகதி பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter