வாக்களிக்காத ஜோதிகா – வௌியான உண்மை!
தற்போது ஜோதிகா பிஸி நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சைத்தான் திரைப்படம் ரூ 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்ரீகாந்த்’ என்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பு தாம்பரத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது ஜோதிகாவிடம், “சமூக பொறுப்பு குறித்து பேசுகிறீர்கள்.. தேர்தலில் நீங்கள் வாக்களிக்கவில்லை என பலரும் விமர்சித்தார்கள்.. அதற்கு உங்கள் பதில் என்ன?” என்று பத்திரிகையாளர் கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அவர், “சில சமயங்களில் வேலைக்காக வெளியூர் செல்ல வேண்டியது இருக்கும். உடலநலக் குறைவால் இருக்கலாம். சில தனிப்பட்ட காரணங்களால் ஊரில் இருக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. ஒன்லைன் மூலமாக கூட ஓட்டு போல அதற்கான option இருக்கு. எல்லா விஷயத்தையும் பொது வெளியில் சொல்ல முடியாது” என்று ஜோதிகா பேசியுள்ளார்.