CSK அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து சில வீரர்கள் வெளியாகியுள்ள நிலையில்,தற்போது மற்றுமொரு முக்கிய வீரரும் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை, நடைபெற்ற 11 லீக் ஆட்டங்களில் 6 வெற்றிகளை பெற்றுள்ளதோடு 5 தோல்விகளை சந்தித்துள்ளது.
எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.
ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து மதீச பதிரன, முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் விலகியுள்ளனர். மேலும் சில வீரர்களுக்கு காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிளே ஆப் சுற்றின்போது, டி20 உலகக் கிண்ணம் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்பியிருக்க வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதால் சிஎஸ்கே வீரர் மொயின் அலி, பிளே ஆப் சுற்றின்போது அணியில் இருக்க மாட்டார் என கூறப்படுகின்றது.
பிளே ஆப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐ எழுதிய கடிதத்தையும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைய வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.