Post

Share this post

ஓடிடியில் வெளியான பீஸ்ட்

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13 அன்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு இசை – அனிருத்.
படம் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றதால் நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருக்குத் தனது வீட்டில் விருந்து வைத்தார் விஜய்.
ஜாலியோ ஜிம்கானா, அரபிக் குத்து ஆகிய இரு பாடல்களும் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பீஸ்ட் படம் தற்போது நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடிகளில் வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் சன் நெக்ஸ்டில் ஹிந்தி தவிர இதர நான்கு மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

Leave a comment