Share this post

10 பவுண்டரி, 10 சிக்ஸர் – புதிய சாதனை!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 140 ஓட்டங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.
இந்த இன்னிங்ஸில் அவர் 10 பவுண்டரி, 10 சிக்ஸர் விளாசி பவுண்டரிகளிலேயே ஒரு சதத்தைக் கண்டுள்ளார். மிரட்டலான இன்னிங்ஸ் மூலம் டி காக் நிறைய மைல்கல்லை எட்டியுள்ளார்.
140* – நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவே தனிநபர் அதிகபட்ச ஸ்கோர். ஒட்டுமொத்தமாக 3-வது அதிகபட்ச ஸ்கோர்.
10 – நடப்பு ஐபிஎல் சீசனில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்கள்
210-0 – ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச முதல் விக்கெட் பாட்னர்ஷிப்
20 ஓவர்கள் – ஐபிஎல் போட்டியில் முழுமையாக பேட் செய்த முதல் இணை.

Recent Posts

Leave a comment