Share this post

சனி பெயர்ச்சி – சிக்கலில் தவிக்கும் 3 ராசிகள்!

சனி பகவான் 2022 வரும் ஜூன் 05 ஆம் திகதி கும்ப ராசியில் வக்ரமாக மாறி பயணிக்கவுள்ளார். சனியின் இந்த பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை ஆரம்பமாகும், சில ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்தார். இதையடுத்து, சனி பகவான் மிக விரைவில் கும்ப ராசியில் வக்ரமாக மாறி பயணிக்கவுள்ளார்.
இந்த பயணமானது 23 அக்டோபர் 2022 வரை இருக்கும். இதனால்,எந்தெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மேஷம் :
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்காது. கடின உழைப்பின் பலன் சரியாக கிடைக்காது. சில வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
கடகம் :
சனியின் வக்ர பெயர்ச்சி கடகம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. எதிலும், கவனமாக இருக்கவும். பணம் தொடர்பான எந்த முடிவையும் ஆலோசித்து எடுங்கள். இல்லையெனில், சேதம் ஏற்படலாம். சில வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும்.
சிம்மம் :
சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். இதன் காரணமாக உங்களுக்கு பிரச்சனைகள் ஆரம்பமாகும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நஷ்டம் ஏற்படும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.

Recent Posts

Leave a comment