OOSAI RADIO

Post

Share this post

கனமழையினால் 47 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, ஏற்கனவே நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், நாட்டின் வடக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான பருவ மழை பெய்து வருகிறது.

வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஃபர்யாப் மாகாணத்தில் 18 ஆம் திகதி பெய்த கனமழையால் அங்குள்ள மூன்று மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால், வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலுமாக சேதமடைந்ததாக மாகாண தகவல் இயக்குனர் ஷம்சுதீன் முகமதி கூறினார்.

இதேபோல், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கு மாகாணமான கோரில், கடந்த 17 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a comment

Type and hit enter