OOSAI RADIO

Post

Share this post

ரைசியின் மரணத்தை கொண்டாடிய மக்கள்!

ஈரானிய முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும் ஈரானிலுள்ள மற்றுமொரு தரப்பினர் அதனை கொண்டாடி வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ரைசியின் மரணத்தை பட்டாசு வெடித்தும், மது விருந்தளித்தும் கொண்டாடுவது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

ஈரான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ரைசி மிகவும் கொடூரமானவர் என்று குற்றம் சாட்டப்பட்டார். இஸ்லாமிய பழக்க வழக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈராக்-ஈரான் போரின் போது பிடிபட்ட கைதிகளை ரைசி கொடூரமாக தூக்கிலிட்டதாகவும், தனது எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக போராடியவர்களை கடுமையாக தண்டித்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதனால் ஈரான் மக்கள் ரைசிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக உள்ளூர் ஊடகங்களில் தொடர் கதைகள் வெளியாகி வருகின்றன.

இந்தப் பின்னணியில்தான் அவரது மரணத்தை ஈரான் மக்கள் கொண்டாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Type and hit enter