1 கிலோ இஞ்சியின் விலை தெரியுமா?
இலங்கையில் ஒரு கிலோ கிராம் இஞ்சியின் விலை 5,000 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
நாரஹேன்பிட்டி பொருளாதார சந்தையில் இன்றைய தினம் ஒரு கிலோ கிராம் இஞ்சியின் சில்லறை விலை 5,000 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நுகர்வோர் முன்னணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ஒரு கிலோ கிராம் எலுமிச்சையின் விலை 1,800 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய நாட்களாக இஞ்சி மற்றும் எலுமிச்சையின் விலைகள் அதிகரிப்பினை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.