OOSAI RADIO

Post

Share this post

பண வரவு கிடைக்கம் ராசிக்காரர்கள்!

இன்றைய நாளில் (27) மகிழ்ச்சிகரமான நாளாக அமைய போகும் இராசிக்ககாரர்கள் பற்றி நாம் இங்கு பார்போம்.

மேஷம் – இன்று உங்களை தேடி நல்ல செய்தி வரும். தெரியாத நபர்களின் ஆதரவை பெறுவீர்கள். உங்களுடைய கடுமையான உழைப்பு மூலமாக எதிரிகளை வெல்வீர்கள். புதிய கட்டுமான வேலைகளுக்கான தேவை ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் அதிர்ஷ்ட எண்: 3

ரிஷபம் – தவறான வழியில் நீங்கள் சேர்க்கக்கூடிய செல்வம் நிச்சயமாக கூடிய விரைவில் உங்களை விட்டுச் செல்லும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். இன்று நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். மன அழுத்தத்தில் இருப்பவர்கள் புத்துணர்ச்சியோடு செயல்படுவதன் மூலமாக வேலைகளை எளிதாக செய்து முடிக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: பிங்க் அதிர்ஷ்ட எண்: 15

மிதுனம் – குடும்பத்தில் உள்ள ஒரு சில பிரச்சனைகளுக்கு தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் குடும்பத்தார் உங்களை எதிர்க்கலாம். எதிர்பாராத பலன்களை பெறுவீர்கள். இன்று பண பரிமாற்றங்கள் செய்யும்பொழுது எச்சரிக்கையாக இருக்கவும். அதிர்ஷ்ட நிறம்: மெஜந்தா அதிர்ஷ்ட எண்: 8

கடகம் – இன்று பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. எனினும் பயணத்தின் பொழுது ஒரு சில பிரச்சனைகள் தேடி வரலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். முடிக்க முடியாமல் இருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். கடுமையான உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமும் செல்வமும் சேரும். அதிர்ஷ்ட நிறம்: கிரீம் அதிர்ஷ்ட எண்: 1

சிம்மம் – இன்றைய நாள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக காணப்படும். தொழிலில் புத்தாக்க திறன்களை பயன்படுத்துங்கள். இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். இன்று அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்: 7

கன்னி – உங்க பிள்ளைகளை நினைத்து வருத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். எனினும் புத்திசாலித்தனமாக செயல்படுவதன் மூலமாக அந்த பிரச்சனையை எளிதாக சமாளிப்பீர்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதை கவனம் செலுத்த வேண்டும். மனதை மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ளுங்கள். எடுத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஊதா அதிர்ஷ்ட எண்: 2

துலாம் – பணியிடத்தில் இன்று பயத்துடன் காணப்படுவீர்கள். பிரச்சனைக்கு பின் பிரச்சனை வந்து சேரும். கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பணியிடத்தில் வேலை செய்வதில் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம். நேரத்தோடு ஒத்துப் போவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பர்கன்டி அதிர்ஷ்ட எண்: 10

விருச்சிகம் – இன்றைய நாள் முழுவதும் ஏதோ ஒரு குழப்பத்தோடு காணப்படுவீர்கள். இதனால் இன்று முழுவதும் தலைவலி இருக்கலாம். உங்கள் பிள்ளைகளை நினைத்து வருத்தப்படுவீர்கள். எனினும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: லாவண்டர் அதிர்ஷ்ட எண்: 12

தனுசு – வீடு மற்றும் வாகனம் தொடர்பான பிரச்சனைகளை இங்கு சந்திப்பீர்கள். இன்று நல்ல செய்தி உங்களை தேடி வரும். குடும்பத்தில் ஏற்படும் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக வருத்தத்துடன் காணப்படுவீர்கள். வீட்டில் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 5

மகரம் – இன்று அசையும் அல்லது அசையா சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இது தொடர்பான ஏற்பாடுகளை செய்வதில் நாள் முழுவதையும் செலவு செய்வீர்கள். இன்று திட்டமிட்ட அனைத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். நண்பர்கள் நீங்கள் செய்யும் வேலையை எதிர்ப்பதற்கு வாய்ப்புள்ளது. அதிர்ஷ்ட நிறம்: மரூன் அதிர்ஷ்ட எண்: 9

கும்பம் – இன்று எதிர்பார்த்த பலன்களை பெறுவீர்கள். வீட்டிற்கு பழைய நண்பர்களின் வருகையை எதிர்பார்க்கலாம். பிறருடன் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். இதனால் பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று பொருளாதார பலன்கள் கிடைக்கலாம். உங்கள் பொருளாதார நிலை மேம்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 4

மீனம் – இன்று உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். வாழ்க்கை துணையோடு பொருளாதார காரணங்களுக்காக ஒரு சில பிரச்சினைகள் ஏற்படலாம். உங்களுடைய திறன்மிகு நடத்தை மூலமாக பலன்களை பெறுவீர்கள். எதிரிகளை உங்களின் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி சமாளிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 6

Leave a comment

Type and hit enter