OOSAI RADIO

Post

Share this post

நிர்வாண திருமணங்களுக்காக கடற்கரை!

இத்தாலியின் தீவான சர்டினியாவில் நிர்வாண திருமணங்களுக்கான கடற்கரை ஒன்று திறக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்டினியாவின் தென்மேற்கே உள்ள கடற்கரையே நிர்வாண திருமணங்களுக்காக உருவாக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த கடற்கரையில் தங்கள் பிறந்தநாள் உடையில், திருமணம் செய்து கொள்ள முடியுமா என ஜேர்மனின் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கடற்கரை அதிகாரிகளிடம் கேட்டபோது, நிர்வாண திருமணங்களுக்கும் குறித்த கடற்கரையில் அனுமதி வழங்க அதிகாரிகள் தீர்மானித்தனர்.

இந்த நிலையில் சார்டினியாவில் உள்ள இஸ்பெனாஸ் கடற்கரையில், இயற்கை ஆர்வலர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும், இந்த கடற்கரையின் அருகில் வசிக்கும் சுமார் 2,500 பேரிடம் இருந்து தமது திட்டத்துக்கு எந்த எதிர்ப்புகளும் வெளியிடப்படவில்லை என இத்தாலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த முன்மொழிவை இத்தாலிய இயற்கை ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவரான கேப்ரியல் ரோசெட்டி ஆதரித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter