OOSAI RADIO

Post

Share this post

புதுசா கல்யாணம் ஆகியிருக்கா? குழந்தைக்கு பிளான் பண்றீங்களா?

குழந்தைக்கு பிளான் செய்யும் போது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்துப் பார்க்கலாம்.

குழந்தை உருவாவதற்கென சில நாள் கணக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் ஒருவர் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், பெண்களுக்கு மாதத்தில் ஒரு நாள் மட்டுமே கருமுட்டை வெளியேறும். அந்த கருமுட்டையானது 12 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை மட்டுமே உயிருடன் இருக்கும். அந்த நேரத்தில் அந்த கருமுட்டை, விந்தணுவை சந்தித்து சேர்ந்தால்தான் அது குழந்தையாக உருவாகும்.

அதே நேரத்தில் விந்தணுவானது பெண்ணின் உடலுக்குள் போனால் அது 5 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். கருமுட்டை ரிலீஸாவதற்கு 4 அல்லது 5 நாட்களுக்கு முன்பும் முட்டை ரிலீஸான நாள் அன்றும் அதற்கு அடுத்த நாளும் கணவனும் மனைவியும் இணைந்தால் குழந்தை உருவாகும்.

ஒரு பெண்ணுக்கு 30 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ரெகுலராக வருகிறதென்றால், பீரியட்ஸ் வருவதற்கு 14 நாட்களுக்கு முன்புதான் முட்டை வெளியேறும். அதற்கு 4 நாட்களுக்கு முன்பும் , முட்டை உருவாகும் நாள், அதற்கு அடுத்த நாள் ஆகிய நாட்களில் உறவில் ஈடுப்பட்டால் குழந்தை பிறப்பதற்கான சாத்தியக்கூறு அதிகம்.

ஒரு சில பெண்களுக்கு 35 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் வருகிறது என்றால் அவர்களும் இதே முறையை பின்பற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் பொதுவானது தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் இந்த நிலை மாறுபட்டிருக்க வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவரின் ஆலோசணைகளை பெற்றுக்கொள்வது சிறந்தது.

Leave a comment

Type and hit enter