OOSAI RADIO

Post

Share this post

MasterChef போட்டியை வென்ற இலங்கைத் தமிழர்! (Video)

பிரித்தானிய தமிழ் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணரான பிரதாபன், UK TV யின் மிகப்பெரிய சமையல் போட்டியான MasterChef Champion 2024 என்ற மதிப்புமிக்க பட்டத்தை வென்றுள்ளார்.

29 வயதான அவர் இங்கிலாந்தில் தமது காதலியுடன் வசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

20 ஆம் முறையாக MasterChef சமையல் போட்டி இவ்வாண்டு நடைபெற்றது.

போட்டியின் இறுதிக்கட்டத்தில் போட்டியாளர்கள் சிங்கப்பூருக்குச் சென்றனர்.

சிங்கப்பூரின் உணவங்காடி உணவுவகைகளைச் சமைக்கக் கற்றுக்கொண்டு அதை Fullerton Bay ஹோட்டலில் சமைக்கும் சவால்களில் அவர்கள் கலந்துகொண்டனர்.

BBC நடாத்தும் MasterChef போட்டியின் வெற்றியாளரான பிரின் பிரதாபன் ஈழத்தின் உரும்பிராயை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter