விசா இல்லாமல் தாய்லாந்து செல்ல அரிய வாய்ப்பு!

ஜூன் 1ஆம் திகதி முதல் இலங்கையர்கள் விசா இல்லாமலேயே தாய்லாந்துக்குச் செல்வதற் கும் அங்கு 60 நாட்கள் வரை தங்குவதற்கும் அந்நாட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கைகளில் இலவச விசா மற்றும் ஒன் அரைவல் விசா திட்டங்கள், மாணவர்கள் நீண்டகாலம் தங்குதல் மற்றும் ஓய்வு பெற்றவர்க ளுக்கு கட்டாய சுகாதார காப்பீடு ஆகியவை அடங்கும்.
அதன்படி, அல்பேனியா, கம்போடியா, சீனா, இந்தியா, ஜமைக்கா, கஜகஸ்தான், லாவோஸ், மெக்சிகோ, மொரோக்கோ, பனாமா, ருமேனியா, இலங்கை மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 36 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுடன், இலங்கை சுற்றுலாப் பயணிகளும் விசா இன்றி தாய்லாந்துக்கு செல்ல முடியும்.
இந்த விரிவாக்கம், விசா இல்லாத நுழைவுக் கான தகுதியுள்ள நாடுகளின் எண்ணிக்கையை 57 இலிருந்து 93ஆக அதிகரித்துள்ளது.