June 1 முதல் 3.9% சம்பள அதிகரிப்பு!
கனேடிய மாகாணங்களில் ஒன்றான பிரிட்டிஸ் கொலம்பியாவில் (British Columbia) ஊழியர்களுக்கான மணித்தியால சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பள அதிகரிப்பானது, இந்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை காலமும் பிரிட்டிஸ் கொலம்பியாவில் குறைந்தபட்ச மணித்தியால சம்பளம் 16.75 டொலர்களே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 3.9 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த சம்பள அதிகரிப்பானது, பணவீக்கத்தை ஈடு செய்யக்கூடிய வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாகாண அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கனடாவில் குறைந்த சம்பளம் வழங்கும் மாகாணமாக காணப்பட்ட பிரிட்டிஸ் கொலம்பியா, அதிகளவு சம்பளம் வழங்கும் மாகாணமக மாற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.