அருணாச்சலில் மீண்டும் ஆட்சியை பிடித்த பா.ஜ.க!
அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பா.ஜ.க, மூன்றாவது முறையாக தொடர்ந்து அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இந்திய பாராளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திராவுக்கு சட்டசபை தேர்தலும் இடம்பெற்றது.
இதில், வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டசபையின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதை அடுத்து, சட்ட சிக்கல்களை தவிர்க்க, அந்த மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 தொகுதிகளில், 46 இல் வென்று, பா.ஜ.க, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.
முதலமைச்சர் பெமா காண்டு உட்பட, 10 பா.ஜ.கவினர் போட்டியின்றி வென்றுள்ளனர். இதை அடுத்து, 50 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 36 இல் பா.ஜ.க, வென்றுள்ளது.