Share this post

IPL 2022 விருதுகள் – முழு விபரம் இதோ…

குஜராத் டைட்டன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி தனது முதல் சீசனிலே ஐபிஎல் கிண்ணத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது. நிறைவு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.
மிகவும் முக்கியமான வீரர் (Most valuable player): ஜாஸ் பட்லர்
ஐபிஎல் தொடரில் இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்களை அடித்து சாதனைப் படைத்தார் பட்லர்.
ஆரஞ்சு கேப் (Orange cap) : ஜாஸ் பட்லர்
17 போட்டிகளில் 863 ஓட்டங்களை குவித்தார். இந்தத் தொடரின் அதிகபட்ச ஓட்டம் இதுவே ஆகும்.
தொடர் நாயகன் (player of the series) : ஜாஸ் பட்லர்
பர்பிள் கேப் (Purple cap ): யுஸ்வேந்திர சஹால்
இந்தத் தொடரில் 27 விக்கெட்டுகள் எடுத்து சாதனைப் புரிந்துள்ளார்.
வளர்ந்துவரும் வீரர் (Emerging player) : உம்ரான் மாலிக்
14 போட்டிகளில் 22 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
அதிகமான 4 அடித்தவர் (Most four) : ஜாஸ் பட்லர்
84 ஃபோர்களை அடித்தார்.
அதிகமான சிக்சர் அடித்தவர் (Most sixes): ஜாஸ் பட்லர்
45 சிக்சர்கள் அடித்தார்.
பவர்பிளேயர் (Power player) : ஜாஸ் பட்லர்
1-6 ஓவர் வரை சிறப்பாக விளையாடியதற்காக கொடுக்கப்பட்டது.
ஆட்டத்தை மாற்றுபவர் (Game changer) : ஜாஸ் பட்லர்
1518 ட்ரீம் லெவன் புள்ளிகளைப் பெற்று இந்த விருதினையும் பட்லர் அவர்களே பெற்றார்.
அதிரடி ஆட்டக்காரர் (Super striker) : தினேஷ் கார்த்திக்
ஸ்டிரைக் ரேட் 183.33 உடன் முதலிடம் பிடித்தார்.
வேகமான பந்து (Fastest delivery): லாக்கி பெர்குசன்
உம்ரான் மாலிக் 157 கிமீ வேகப்பந்தை விட சிறிது அதிகமான வேகத்தில் (157.3 கிமீ) வீசி இந்த சாதனையைப் படைத்தார் பெர்குசன்.
சிறந்த கேட்ச் (Best catch) : எவின் லுவிஸ்
கொல்கத்தா அணிக்கு எதிராக கடைசி ஒவரில் ஒற்றைக் கையில் லுவிஸ் பிடித்த கேட்ச்.
நேர்மையான ஆட்டத்திற்கான விருது (Fair play award): குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்
இரண்டு அணிகளுமே அட்டவணையில் சராசரியாக 10 புள்ளிகளை பெற்று விளையாட்டு கண்ணியம் குறையாமல் விளையாடியது.

Recent Posts

Leave a comment