OOSAI RADIO

Post

Share this post

ஒரே பெயரில் 5 போட்டியாளர்கள்!

ராமநாதபுரம் மக்களவை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 50,407 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிட்டார்.

அதே தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 பேர் சுயேச்சையாக களம் கண்டனர். இந்நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனி 97,704 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வம் 50,407 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் 21,217 வாக்குகளும், நாதக வேட்பாளர் 16,725 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

மேலும், ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் 579 வாக்குகளும், ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் 107 வாக்குகளும், ஒய்யாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் 310 வாக்குகளும், ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் 210 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Leave a comment

Type and hit enter