மூளை பிரச்சனை – உயிர் பிழைக்க மாட்டேன் – நடிகை வேதனை!
நடிகை அஸ்ரிதா மூளை பாதிப்பிலிருந்து மீண்டு வந்தது குறித்து பேசியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ராகிணி கேரக்டர் மூலம் பிரபலமானவர் நடிகை அஸ்ரிதா. கனா காணும் காலங்கள், தேன் மொழி பிஏ, நாம் இருவர் நமக்கு இருவர், சொந்த பந்தம், கல்யாண பரிசு போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து, 2015ல் காவியம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது 23 வயதில் நடந்த விபத்தில் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போய்விடும். இனி நடக்கவே முடியாது.
உயிர் வாழவே முடியாது. ஒருவேளை இவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு 10% தான் வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க. ஆனால் நான் என்னுடைய அம்மா மற்றும் என்னுடைய மன தைரியத்தின் காரணமாகவே ஒரு மாதத்திற்குள்ளேயே கேமரா முன்னாடி வந்து நின்றேன்.
சின்ன வயசிலேயே தன்னுடைய தந்தை இறந்து போன பிறகு தான் சினிமா மற்றும் சீரியலில் நடித்துதான் தன்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொண்டேன். தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்கும் போது ராகிணி கேரக்டரில் நடித்ததற்காக சிலர் என்னை திட்டுவார்கள்.
ஆரம்பத்தில் அது எனக்கு கஷ்டத்தை கொடுத்திருந்தாலும் பிறகு பழகிவிட்டது. நம்முடைய நடிப்பை உண்மை என்று நம்பி தானே ரசிகர்கள் திட்டுகிறார்கள் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.