சங்கடம் தரக்கூடிய சந்திராஷ்டமம் நாள் இன்று!
இன்றைய ராசிபலன் ஜூன் 05, 2024, குரோதி வருடம் வைகாசி 23, புதன் கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். சந்திரனின் சஞ்சாரம் துலாம் ராசியில் உள்ள சித்திரை, சுவாதி நட்சத்திரங்களை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.
இவ்வாறான இந்த நாளில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை பற்றி தெரிந்து கொள்வோம்.
மேஷம்
இன்று உங்களுக்கு முக்கியமான நாளாக இருக்கும். வணிகர்களின் சில வியாபார திட்டங்கள் இன்று நிறைவேறும் என்பதால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்களுக்கு கொடுக்கப்படும் சில வேலைகளை முடிக்க முடியாததால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இன்று முக்கிய விஷயங்களில் அனுபவமிக்க நபரின் ஆலோசனையைப் பெற வேண்டும், அப்போதுதான் நீங்கள் முன்னேற முடியும்.
ரிஷபம்
இன்று உங்களின் பணியிடத்தில் சில தடைகளை சந்தித்தாலும் வருமானம் ஈட்டுவதில் வெற்றி பெறுவீர்கள். எந்த ஒரு சூழலிலும் இன்று கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் உடல்நிலை சில நாட்களாக சரியில்லாமல் இருந்ததால், இன்று அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். எந்த ஒரு முடிவையும் அலட்சியமாக எடுக்காதீர்கள்
மிதுனம்
காதல் வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் உற்சாகமான நாளாக இருக்கும். உங்கள் பணியிடத்தில் இன்று உங்களுக்கு சில சிறப்பு சலுகைகள் கிடைக்கலாம். உங்களது தேவைக்காக இன்று சில காஸ்ட்லி பொருட்களை நீங்கள் வாங்கலாம், உங்கள் எதிரிகள் இன்று உங்களைப் பார்த்து பொறாமைப்படக்கூடும். உங்கள் பெற்றோரின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்.
கடகம்
இன்றைய நாள் உங்களின் மனச் சுமைகளில் இருந்து விடுபடும் நாளாக இருக்கும். உங்கள் திறமையை மெருகேற்ற உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவீர்கள். வெளிநபர்கள் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதை இன்று நீங்கள் தவிர்க்க வேண்டும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
இன்றைய நாள் நீங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு கொடுக்கப்படும் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்கவும், இல்லையெனில் சிக்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் ஏற்படும் சில சச்சரவுகளால் கவலைப்படுவீர்கள், இன்று சில வேலைகளுக்கு உங்கள் நண்பர்களிடம் இருந்து உதவி பெற வேண்டியிருக்கும். சிறு வணிகர்கள் இன்று தங்கள் விருப்பப்படி லாபம் ஈட்டுவார்கள்.
கன்னி
இன்றைய நாள் உங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் உங்களை தொந்தரவு செய்யலாம். இன்று யாரிடமும் எந்தவிதமான வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாம். உங்களின் அன்றாட வழக்கத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால், அது உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த கூடும். பிறரது ஆலோசனைகளை நம்பி பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.
துலாம்
இன்று உங்கள் பணியிடத்தில் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் உறவினரிடமிருந்து இன்று சில நல்ல செய்திகள் கேட்கலாம். குடும்ப உறுப்பினர்களை சமாதானப்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க வாய்ப்பு கிடைக்கும். உணர்ச்சி ஆரோக்கியத்தை கவனித்து கொள்வதில் அக்கறை செலுத்துங்கள்.
விருச்சிகம்
இன்று உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் எழாமல் பார்த்து கொள்ளுங்கள். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் பெரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உங்கள் குடும்பத்தில்சில சுப நிகழ்ச்சிகளை இன்று ஏற்பாடு செய்யாலாம். உங்கள் நண்பர்களில் ஒருவர் உங்களுக்கு விருப்பமான ஒன்றை பரிசளிக்கலாம். இன்று நீங்கள் எந்தவொரு விஷயத்தையும் விரைவாக தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
தனுசு
இன்று நீங்கள் தவறான புரிதலை தவிர்க்க வேண்டும், இல்லையெனில் உறவுக்குள் பெரும் பிரச்சினைகள் ஏற்படலாம். கடந்த காலத்தில் நீங்கள் செய்த பழைய தவறு ஒன்று, இன்று உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். பனி செய்யும் இடத்தில் ஒருவருடன் உங்களுக்கு போட்டி இருந்தால், அவர்களுடன் கவனமாக இருங்கள். உங்கள் நிதி நிலைமை குறித்து கவலை எழலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
மகரம்
இன்று குடும்ப உறுப்பினர்களுடன் மோதல் அல்லது வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். சில உற்சாகமான நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். யாருடனும் உங்கள் ரகசியங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள், இல்லையெனில் பின்னாளில் உங்களது வீக்னஸாக அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நெருங்கிய நபர்களுடன் நிலவி வந்த தகராறு பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வரும்.
கும்பம்
வியாபாரிகளுக்கு இன்றைய நாள் மிகவும் லாபகரமான நாளாக இருக்கும். எதிர்பார்த்ததை விட அதிக பணம் கிடைக்கும். நீங்கள் அடைக்க வேண்டிய கடன் பணத்தை திருப்பி செலுத்த வாய்ப்பு கிடைக்கும். உங்களது பேச்சு மற்றும் செயல்களில் இனிமையை கடைப்பிடிக்க வேண்டும். குடும்ப நன்மைகளை கருத்தில் கொண்டு கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள்.
மீனம்
இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். இன்று நீங்கள் சில புதிய முயற்சிகளை தொடங்கலாம், இதன் பலன் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். உங்கள் வேலையில் மட்டுமே இன்று கவனம் செலுத்த வேண்டும், மற்றவர்களைப் பற்றி அதிகம் பேசக்கூடாது. விளையாட்டு போட்டிகளில் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். முதலீடு தொடர்பான விவகாரங்களில் பிறரது ஆலோசனைகளை இன்று ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது நல்லது.