OOSAI RADIO

Post

Share this post

சுவிஸை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்!

Schwyz மாநிலத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சூரிச்சில் உள்ள சுவிஸ் நில அதிர்வு சேவையானது அறிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் நேற்று (04-06-2024) நண்பகல் ஏற்பட்டுள்ளது.

சுவைஸ் மாநிலத்தின் (Kanton Schwyz) மையப்பகுதியில் இருந்து தென்மேற்கே சுமார் 6 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது 2:34:32 மணிக்கு (உள்ளூர் நேரம்) ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக இருந்தது.

இந்த நிலநடுக்கம் சுவிஸ் முழுவதும் உணரப்பட்டுள்ளதாக சுவிஸ் நில அதிர்வு சேவையானது தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் இந்த அளவு நிலநடுக்கத்தில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Leave a comment

Type and hit enter