இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நாடளாவிய ரீதியில் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாக வாந்தி, அஜீரணம், காய்ச்சலுடன் கூடிய வயிற்று வலி போன்ற நோய் அறிகுறிகள் காணப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், வயிற்றுப்போக்குக்கு கூடுதலாக, கழிவறைக்கு செல்லும் போது இரத்தப்போக்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவான நோய்களாகும். குறிப்பாக வயிற்றுப்போக்கு அழுக்கு நீர் மற்றும் அழுக்கு உணவுகளால் பரவுகின்றது. இவை இன்புளூயன்ஸா பரவலாக அமையலாம்.
எனவே, ஒரு குடும்பத்தில் இருமல், சளி அல்லது காய்ச்சல் பரவினால், வைரஸ் காய்ச்சலாகவும் இருக்கலாம். இது தவிர இந்த குளிர் காலத்தால் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
குழந்தைகளுக்கு இருமல், சளி அல்லது சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் வைத்திய ஆலோசணைகளை பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.