X தளத்தில் ஆபாச படங்களுக்கு அனுமதி!
முன்பு டிவிட்டர் என அழைக்கப்பட்ட எக்ஸ் தளம் எலான் மஸ்க் வசம் இருக்கிறது. இப்போது அதன் கன்டென்ட் கொள்கையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. இப்போது வெளியாகியிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஆபாச படங்கள் சட்டப்பூர்வமாக இந்த தளத்தில் அனுமதிக்கும் வகையில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) கன்டென்டுகளும், அனிமேஷன் வீடியோக்களும் அனுமதிக்கும் வகையில் புதிய கொள்கை மாறுபாடு கொண்டு வரப்பட்டிருக்கிறது. வயது வந்தோர் நிர்வாணம் அல்லது பாலியல் தொடர்பான இத்தகைய கன்டென்டுகளை தாராளமாக பார்த்து ரசிக்கலாம்.
X இல் வயது வந்தோருக்கான கன்டென்டுகளை விரும்பாத பயனர்களுக்கு, அதற்கேற்ப மீடியா அமைப்புகளை சரிசெய்ய எக்ஸ் தளம் பரிந்துரைக்கிறது. இது போன்ற பாலியல் படங்கள் மற்றும் வீடியோக்கள் கன்டென்டுகள் பார்க்க விரும்பவில்லை என நினைப்பவர்கள் எக்ஸ் செட்டிங்ஸில் இருக்கும் content warning ஆப்சனை ஆன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் வந்தால் இந்த எச்சரிக்கை யூசர்களுக்கு காண்பிக்கும்.
அதேநேரத்தில் எல்லா ஆபாச படங்களை எல்லாம் இந்த தளத்தில் பகிர முடியாது. ஒருமித்த கருத்துகளுக்கு அப்பாற்பட்ட ஆபாச படங்களை எல்லாம் பதிவேற்றக்கூடாது. சிறார் படங்கள், சமூகத்துக்கு தீங்கிழைக்கும் படங்கள் எல்லாம் பதிவேற்றக்கூடாது என எக்ஸ் தளத்தில் கண்டிஷனில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புரொபைல் படங்களாக ஆபாச படங்களை வைக்க முடியாது. பொதுவில் தெரியும் வகையில் எந்த கன்டென்ட் புகைப்படங்களையும் வைக்க எக்ஸ் அனுமதிக்காது என தெளிவுபடுத்தியுள்ளது. அதேநேரத்தில் இந்த ஆபாச படங்கள் குறித்து புகார் அளிக்கவும் ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கிறது.
யாரெல்லாம் ஆபாச படங்கள் பார்க்க முடியாது?
எக்ஸ் தளத்தின் கொள்கையின்படி, 18 வயதுக்குட்பட்ட பயனர்கள் அல்லது பிறந்த தேதியை வழங்காதவர்கள் வயது வந்தோர் உள்ளடக்கமாகக் குறிக்கப்பட்ட கன்டென்டுகளை பார்க்க முடியாது. எக்ஸ் தளத்தின் இந்த அறிவிப்பு இணையவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலான் மஸ்க் எடுத்த இந்த நடவடிக்கைக்கு கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. ஏற்கனவே எக்ஸ் தளத்தில் ஆபாச படங்கள் நிறைந்திருப்பதாக விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த சூழலில் வணிகத்தை கருத்தில் கொண்டு எலான் மஸ்க் இத்தகைய முடிவு எடுத்திருப்பதாகவும், இதனை திரும்ப பெற வேண்டும் என பலர் வலியுறுத்துகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்க இது வழிவகுக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.