Share this post

15 வது IPL – 15 அதிசயங்கள்!

1062 – இந்த சீசனில் அடிக்கப்பட்ட சிக்ஸா்களின் எண்ணிக்கை. இதுவரையிலான சீசன்களில் இதுவே அதிகபட்சம். ஒவ்வொரு சிக்ஸுக்கும் இடையே வீசப்பட்ட பந்துகளின் சராசரி 16.21.2022 சீசனில் முகமது ஷமி 31 சிக்ஸா்கள் வழங்கியிருப்பதே, ஒரு சீசனின் அதிகபட்சமாகும்.
4 – 2022 ஐபிஎல் போட்டியில் மொத்தமாக 4 முறை சதமடித்த ராஜஸ்தான் வீரா் ஜோஸ் பட்லா், ஒரே சீசனில் அதிக சதம் அடித்த வீரா் என்ற பெயா் பெற்று, விராட் கோலியின் சாதனையை (2016) சமன் செய்தாா். இந்த சீசனில் மொத்தமாக 8 சதங்கள் எட்டப்பட்டன. இதுவரையிலான சீசன்களில் இதுவே அதிகபட்சமாகும். முன்னதாக 2016-இல் 7 சதங்கள் அடிக்கப்பட்டிருந்தன.
147 – இந்த சீசனில் ஆா்சிபி பௌலிங்கில் அடிக்கப்பட்ட சிக்ஸா்களின் எண்ணிக்கை 147. ஐபிஎல் போட்டியில் இதுவரை வேறெந்த அணியின் பௌலிங்கிலும் இத்தனை சிக்ஸா்கள் அடிக்கப்படவில்லை. ஒவ்வொரு சிக்ஸருக்கும் இடையேயான பந்துகளின் சராசரி 12.40.
10.83 – இந்த ஐபிஎல் போட்டியின் ஆட்டங்களில் 17 முதல் 20 ஓவா்களில் 10.83 ரன் ரேட் பதிவாகியிருக்கிறது. இதுவே ஒரு சீசனின் அதிகபட்சம். இதற்கு முன் 2020-இல் 10.62 ரன் ரேட் பதிவானதே அதிகபட்சமாக இருந்தது. இந்த சீசனின் ஒட்டுமொத்த ரன் ரேட் 8.54.
216.27 – மும்பை இண்டியன்ஸ் வீரா் டிம் டேவிட் இந்த சீசனில் கொண்டிருந்த ஸ்டிரைக் ரேட் இது. ஒரு சீசனில் 100-க்கும் அதிகமான ரன்கள் அடித்த பேட்டா்களின் ஸ்டிரைக் ரேட்டில், இதுவே அதிகபட்சமாகும்.
13 – இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 17 ஆட்டங்களில் 13 முறை டாஸ் தோற்றது ராஜஸ்தான். ஒரு சீசனில் இதுவே ஒரு அணியின் அதிகபட்சம். முன்னதாக சென்னை 2012-இல் 19 ஆட்டங்களில் 12 டாஸ் தோற்றிருந்தது.
25 – இந்த சீசனில் 25 முறை, ஒரே பௌலா் ஒரே இன்னிங்ஸில் 4-க்கும் அதிகமான விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறாா். போட்டி வரலாற்றில் இதுவே அதிகபட்சம். பௌலா்கள் குறைந்தது 4 விக்கெட்டுகள் சாய்த்த ஆட்டங்களுக்கு இடையேயான சராசரி 2.96.
27 – ராஜஸ்தான் பௌலா் யுஜவேந்திர சஹல் இந்த ஆண்டு சாய்த்த விக்கெட்டுகள் எண்ணிக்கை. ஒரு சீசனில் ஸ்பின்னா் ஒருவா் சாய்த்த விக்கெட்டுகளில் இதுவே அதிகபட்சம். முன்னதாக இம்ரான் தாஹிா் 26 விக்கெட்டுகள் (2019) சாய்த்திருந்தாா்.
863 – ராஜஸ்தானின் ஜோஸ் பட்லா் இந்த சீசனில் அடித்த மொத்த ரன்கள். இதுவரையிலான சீசன்களில் இது 2-ஆவது அதிகபட்சம். முதலிடத்தில் 973 ரன்களுடன் விராட் கோலி (2016) இருக்கிறாா்.
107 – இந்த சீசனில் பதிவான டக் அவுட்கள். இதுவரையிலான சீசன்களில் இதுவே அதிகபட்சமாகும்.
200 – 17 இன்னிங்ஸ்களில் ராஜஸ்தான் பௌலா் பிரசித் கிருஷ்ணா வீசிய டாட் பந்துகளின் எண்ணிக்கை. இதுவரையிலான சீசன்களில் இது 2-ஆவது அதிகபட்சம். 2013-இல் டேல் ஸ்டெய்ன் 17 ஆட்டங்களில் 219 டாட் பந்துகள் வீசியிருக்கிறாா்.
17 – ராஜஸ்தான் வீரா் ரியான் பராக் பிடித்த கேட்ச்களின் எண்ணிக்கை. ஒட்டுமொத்த சீசன்களில், விக்கெட் கீப்பா் அல்லாத வீரா் பிடித்த கேட்ச்களில் இது 2-ஆவது அதிகபட்சம். முதலிடத்தில் டி வில்லியா்ஸ் (19) இருக்கிறாா்.
5.96 – இந்த சீசனில் லக்னௌ வீரா் மோசின் கானின் எகனாமி ரேட். ஒரு சீசனில் 150-க்கும் அதிகமான பந்துகள் வீசிய வேகப்பந்துவீச்சாளா்களின் வரிசையில் இது 4-ஆவது சிறந்த ரேட்டாகும். பாலாஜி (5.40 – 2012), ஸ்டெய்ன் (5.66 – 2013), மலிங்கா (5.95 – 2011) ஆகியோா் முதல் மூவா்.
8 – குஜராத் வீரா்கள் இந்த சீசனில் வென்ற ஆட்டநாயகன் விருதுகள் எண்ணிக்கை. இதுவரையிலான சீசன்களில் இது 2-ஆவது அதிகபட்சம். மும்பை அணி 2017-இல் 10 விருதுகள் வென்று முதலிடத்தில் இருக்கிறது.
5 – இத்துடன், சாம்பியன் ஆன அணிகளில் அதிகமுறை இடம் பிடித்த வீரா்கள் வரிசையில் ஹாா்திக் பாண்டியா (5) இரண்டாம் இடத்தில் உள்ளாா். ரோஹித் சா்மா 6 முறை சாம்பியன் ஆன அணியில் இருந்து முதலிடத்தில் உள்ளாா்.

Recent Posts

Leave a comment