முட்டை பிரியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!
நாட்டில் முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 45 ரூபாய் வரை குறைக்க முடியும் என உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் அதிகப்படியான முட்டை உற்பத்தி கிடைப்பதால் முட்டையின் விலை மேலும் குறையும் என உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், முட்டை சந்தையில் 35 ரூபாய் முதல் 48 ரூபாய் வரை முட்டையை நுகர்வோர் வாங்குகின்றனர் என்றும் முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.