மகளை தவறான முறையில் காணொளி எடுத்த தாய் கைது!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் தனது மகளை தவறான முறையில் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த குற்றச்சாட்டில் தாயார் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (12) புதுக்குடியிருப்பு தேவிபுரம் பாரதி வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது 32 வயதுடைய இரண்டு பதின்ம வயது பெண்பிள்ளைகளை கொண்ட தயாரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கணவனை பிரிந்த நிலையில் வாழ்ந்து வரும் இவர் தனது 13 வயதுடைய மகள் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை அவரை தவறான முறையில் தனது கைபேசியில் காணொளி எடுத்துள்ளார்.
இதனை சிறமியின் தங்கையான 10வயது சிறுமி கண்டு தனது சித்திக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த தாயார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றார்கள்.