OOSAI RADIO

Post

Share this post

இந்த ராசி ஆண்கள் இப்படித்தான்!

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கு ஏற்ப அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் விசேட பண்புகள் ஆகியன மாற்றமடையும்.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்கள் எதிர்காலத்தில் மிகவும் கண்டிப்பான அப்பாவாக இருப்பார்கள்.

அப்படி தங்களின் குழந்தைகளை கடுமையாக நெறிப்படுத்தக்கூடிய அப்பாவாக இருக்கும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே தங்களின் வார்த்தைக்கு மற்றவர்கள் கட்டுப்பட வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

தங்களை சுற்றியுள்ளவர்களை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் உறுதியாக இருக்கும். எனவே ஒரு தந்தையாக இவர்கள் மிகவும் கண்டிப்பானவர்களாக இருப்பார்கள்.

கன்னி

கன்னி ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே அனைத்து விடயங்களிலும் முழுமையை எதிர்பார்ப்பார்கள். விதிமுறைகளை ஒழுங்காக கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள்.

இவர்கள் அப்பாவாக குழந்தைகள் மீது அதிக பாசம் மற்றும் அக்கறை வைத்திருந்தாலும் அதனை பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். குழந்தைகள் ஒழுக்கமாக வளர வேண்டும் என்பதற்காக மிகவும் கண்டிப்புடன் இருப்பார்கள்.

துலாம்

துலாம் ராசியில் பிறந்த ஆண்கள் நேர்மை மற்றும் ராஜ தந்திரங்களுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். ஒரு தந்தையாக அவர்கள் குடும்பத்தில் சிறந்த வழிக்காட்டியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் உறுதியாக இருப்பார்கள்.

குழந்தைகளை கட்டுப்பாடுடனும் ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் வளர்க்க வேண்டும் என நினைப்பதால் மிகவும் கண்டிப்புடன் நடந்துக்கொண்டாலும் மனதளவில் குழந்தைகள் மீது அதிக பாசமும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

Leave a comment

Type and hit enter