கணவன் – மனைவி பந்தம் 7 ஜென்மத்துக்கு நிலைக்கணுமா?
இந்தியாவின் பண்டைய காலத்தில் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பல துறைகளில் சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர். இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் இருந்தன.
இதனைவே அறிவுரைகளின் தொகுப்பாக்கப்பட்டு இன்று மக்கள்
சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதற்கு சில அறிவுரைகளை சாணக்கியர் வழங்கியுள்ளார். இது தொடர்பான பூரண விளக்கத்தை தொடர்ந்து பார்க்கலாம்.
- காலையில் எழுந்து கணவன்-மனைவி இருவரும் யோகா செய்யலாம். இது உடல் ஆரோக்கியத்தை தாண்டி மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. அத்துடன் சந்தோசமானதொரு குடும்ப வாழ்க்கை வாழ மன அமைதி அவசியம் என சாணக்கியர் கூறுகிறார். இந்த பயிற்சி செய்து வந்தால் கணவன் – மனைவிக்குள் சண்டையே வராது.
- கணவன்-மனைவி இருவரும் அளவிற்கு அதிகமாக அன்பு செலுத்த வேண்டும். இது புத்துணர்வு அளித்து வாழ்க்கையை ஒளிமயமாக்குகிறது. எனவே காலை எழும் போது ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு எழுந்திருங்கள் என சாணக்கியர் கூறுகிறார்.
- கடவுளின் ஆசீர்வாதம் குடும்ப வாழ்க்கைக்கு அவசியம். காலையில் எழுந்து குளித்து விட்டு இறைவனை வழிபடுவதால் அவர்களிடம் இருக்கும் எதிர்மறையான ஆற்றல்கள் மறைந்து நேர்மறையான ஆற்றல்கள் அதிகரிக்கும். அத்துடன் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும்.
- தற்போது நிறைய வீடுகளில் துளசி செடி வளர்ப்பதை வழக்கமாக்கி வருகிறார்கள். கணவன் – மனைவி அன்றைய நாள் முழுவதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றால் காலையில் எழுந்தவுடன் ஜோடியாக துளசிச் செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அப்போது துளசி செடி போல் குடும்ப வாழ்க்கையும் செழிப்பாக இருக்கும்.
- திருமண வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் அன்பும் மரியாதையும் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் வாழ்க்கை வளமாக இருக்கும். ஆகவே கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் எப்போதும் மதித்து ஒத்துழைக்க வேண்டும்.