OOSAI RADIO

Post

Share this post

எரிபொருள் விலையை 50 ரூபாவினால் குறைக்கலாம்!

கடலில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கும் போது ஐயாயிரம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் காணாமல்போனமை குறித்து பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் இறக்கும் போது பல கோடி ரூபாய் மதிப்பிலான 23,786 பீப்பாய்கள் கச்சா எண்ணெய் காணாமல்போனமை தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவு இரண்டாவது முறையாக விசாரணையை தொடங்கியுள்ளது.

கடலில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கும் குழாயில் ஏற்பட்ட கசிவால் 5,000 பீப்பாய் கச்சா எண்ணெய் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கடற்படையின் டைவர்ஸ் மற்றும் விசேட ட்ரோன் கமராக்களை அனுப்பி ஆய்வு செய்த போது குழாய் அமைப்பில் எவ்வித கோளாறும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

“மூன்று தடவைகள் ஆயிரக்கணக்கான எண்ணெய் பீப்பாய்கள் திருடப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்திருந்த போதும், கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகளை மறைத்து சில அதிகாரிகளும் இவற்றை மறைக்க முயன்றுள்ளமையும் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய மேலாளராக பணிபுரியும் அதிகாரி ஒருவரும் இந்த மோசடிகளுக்குப் பின்னால் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

ஒரு பெரல் கச்சா எண்ணெயில் 159 லீற்றர் எண்ணெய் உள்ளது. ஒரே நேரத்தில் கச்சா எண்ணெய் கப்பலை இறக்கும் போது வீணாகும் அளவு கையிருப்பில் மூன்று வீதமென (0.3) கருதி 1,800 பீப்பாய்கள் எண்ணெய் கடத்தல் சிறிது காலமாக நடந்து வந்தமையும் முன்பு தெரியவந்துள்ளது.

இந்த தொகையைச் சேமிக்க முடிந்தால், ஒரு எண்ணெய்க் கப்பலில் 500,000,000 ரூபாய்க்கு மேல் சேமிக்க முடியும் என்றும், இவ்வாறான மோசடியைத் தடுக்க முடிந்தால், எரிபொருள் தலா லீற்றருக்கு 50 ரூபாய் குறைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter