கண்கலங்கிய நடுவர்கள் – சரிகமப போட்டியாளர்களின் சாதனை! (வீடியோ)

பிரபல தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகின்றது.
இந்த போட்டியில் கலந்துகொண்ட அனைவருமே திறமை வாய்ந்தவர்கள் யாரும் யாருக்கும் சலித்தவர்கள் இல்லை. இருப்பினும் கடந்த வாரத்தில் இருந்து எலிமினேஷன் ஆரம்பமாகி வருகின்றது.
கடந்த வாரம் மணிரத்தினத்தின் மௌன ராகங்கள் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சிறப்பான பாடல்களை பாடி சிறப்பித்து இருந்தனர். இதன்போது அனேக போட்டியாளர்கள் golden performance தட்டிச் சென்றனர்.
இந்த வாரத்தின் நிகழ்ச்சியில் நடுவர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கண்கலங்க வைத்த போட்டியாளர்களின் பாடல் அனேகம். அந்த வகையில் தான் காதல் ரோஜா பாடலை கண்கலங்கியபடியே பாடினார் போட்டியாளர் அமன் ஷாகா.
இதன்போது நடுவர்கள் இவர்களின் இருக்கையை விட்டு எழுந்து வந்து தனது பாராட்டுக்களை தெரிவித்தனர். அப்படி பாடல் பாடி சிலர் இந்த வாரத்திற்கான பரிசுகளையும் பெற்று சென்றனர்.
கடந்த வார சரிகமப சிகழ்ச்சியின் இறுதியில் மிகவும் குறைவான புள்ளிகளை பெற்ற இரு போட்டியாளர்கள் அதாவது விஜய் மற்றும் குணாளன் இருவரில் குணாளன் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டார். இப்படியாக இந்த வார நிகழ்ச்சி முடிவுற்ற நிலையில் அடுத்த வாரத்திற்கான சரிகமப நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.