OOSAI RADIO

Post

Share this post

பூமி தொடர்பில் வௌியான அதிர்ச்சி தகவல்!

பூமியின் மேற்பரப்பை விட உட்புறம் மிகவும் மெதுவாகச் சுழல்வதை லிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வு மக்கள் பயன்படுத்தும் மணிநேரம், நாட்கள் மற்றும் வாரங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிவியல் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக 2010 இல், பூமியின் உட்புறத்தின் சுழற்சி வேகம் குறையத் தொடங்கியுள்ளதாக நேச்சர் இதழ் தெரிவித்திருந்தது.

நமது பூமிக்கு கீழே 4,800 கி.மீ ஆழத்தில் வெப்பமும் அடர்த்தியும் நிறைந்த இரும்பு மற்றும் நிக்கல் கலந்த கோளம் ஒன்று சுழன்று கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் முன்னரே கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலைமையால் உலகில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும், காலமாற்றத்தில் சிறிதளவு மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் விஞ்ஞானிகள் ஊகிப்பதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a comment

Type and hit enter